LATEST NEWS
உங்களுக்கு என்ன ஆச்சு?…. முகத்தில் ரத்த காயங்களுடன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை யாஷிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இன்றைய இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். இதனிடையே கடந்த வருடம் இரவு பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய போது யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவரின் தோழி உயிரிழந்த நிலையில் படுமோசமான காயங்களுடன் யாசிக்க உயிர் தப்பித்தார்.
நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்ற இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். வழக்கம் போல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். இந்நிலையில் முகத்தில் காயங்களுடன் கூடிய ரத்தத்துடன் இருக்கும் ஒரு வீடியோவை யாஷிகா வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் இது படப்பிடிப்பிற்காக பெயிண்ட் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
