VIDEOS
“ரஞ்சிதமே” பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சரத்குமார்…. இணையத்தை கலக்கும் மாஸ் வீடியோ (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வையாளர்களையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து மாபெரும் சாதனை படைத்தது.
இந்தத் திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் தனது குடும்பத்துடன் ஒரு ட்ரிப் சென்றுள்ளார்.
அப்போது வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு நடிகர் சரத்குமார் அவருடைய மகள் வரலட்சுமி நடனம் ஆகியுள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை ரசிகர்கள் ரசித்து கமெண்டு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/HydTimes/status/1615954203805126658
