LATEST NEWS
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் திருமணத்தில்… கலந்து கொண்ட ஒட்டு மொத்த திரை பிரபலங்கள்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக 1992 ஆம் ஆண்டு ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு ஓரளவு இளமையை எட்டியதும் தேவதையை கண்டேன் மற்றும் தித்திக்குதே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மகள் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.
இவருக்கு வனிதா மற்றும் பிரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரரும் உள்ளனர்.’
இதனிடையே தன்னுடைய அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவருக்கு ஒரு மகளும் உள்ளார். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நோவோடெல் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரைப்படங்களும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
குறிப்பாக ஸ்ரீகாந்த், நிதின் கபூர், மோகன் பாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகி வருகின்றது.
