டாட்டூ குத்தி உள்ள பிரபல முன்னணி நடிகர்கள்… யார் யார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

டாட்டூ குத்தி உள்ள பிரபல முன்னணி நடிகர்கள்… யார் யார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

உடலில் டாட்டூ குத்திக் கொள்வது என்பது மிகவும் ஃபேஷனாக மாறிவிட்டது .இதற்காக பல்வேறு டாட்டூ மையங்கள் திறக்கப்பட்டு அனைவரும் டாட்டூ குத்திக் கொள்கின்றனர். மனைவியின் உருவம் அல்லது பெயர், அம்மாவின் பெயர் அல்லது உருவம், தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை டாட்டூவாக உடலில் தங்களுக்கு பிடித்த இடத்தில் குத்திக் கொள்வது தற்பொழுது பேஷன் ஆகிவிட்டது. அப்படி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை டாட்டூவாக உடலில் குத்தியுள்ளனர். தற்பொழுது அவர்களை பற்றி இத்தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

விக்ரம்:

Advertisement

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். இறுதியாக இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தா.ர் இதை தொடர்ந்தும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் விக்ரம் தனது இடது கையில் போட்டுள்ள டாட்டூவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருவ் விக்ரம்:

Advertisement

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் பட்டியலில் முன்னிலை வகிப்பவர் நடிகர் துருவ் விக்ரம் .இவர் பிரபல நடிகர் விக்ரமின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தார். பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தற்போது வரை தனது அங்கீகாரத்திற்காக தனது திறமையை நிரூபிப்பதற்காக திரையுலகில் தொடர்ந்து போராடி வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவர் தனது வலது கையில் தனது அப்பாவின் பெயரான விக்ரம் என்பதை டாட்டுவாக குத்தியுள்ளார்.

சூர்யா:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவர் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது நடிகர் சூர்யா தனது கையில் கொடுத்திருக்கும் டாட்டூவின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அருண் விஜய்:

Advertisement

80 – 90ஸ் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் என்று அடையாளத்தோடு வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் அருண் விஜய். இவர் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்பொழுது இவர் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக கமிட்டாகி ஹீரோவாக நடித்து வருகிறார். தனது இடது கையிலும், கழுத்தின் பின்புறமும் குத்தியுள்ள டாட்டுவானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நாகார்ஜுனா:

Advertisement

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் உள்ளனர். இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நடிகர் நாக சைதன்யா தனது வலது கையில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

நாகசைதன்யா:

Advertisement

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவருக்கு என்று தெலுங்கில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தெலுங்கில் மட்டுமின்றி இவர் தமிழ் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்பொழுது இவர் தனது கையில் வலது கையில் குத்தி இருக்கும் டாட்டுவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in