50 வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல்…. முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா…??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

50 வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல்…. முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா…???

Published

on

பொதுவாக சினிமாவில் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும், திருமணம் செய்து விவாகரத்து பெறுவதும் சாதாரணம்தான். அதுவே 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் பிரபலங்கள் ஏராளம். அப்படி 80 மற்றும் 90களில் முன்னணியின் நடிகர்களுடன் கலக்கிய திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகை சித்தாரா:

Advertisement

தமிழில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் சித்தாரா. கேரளத்து பைங்கிளியான இவர் தன்னுடைய 50 வயதை எட்டி உள்ளார். இவர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த காதல் கை கூடாததால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை மும்தாஜ்:

Advertisement

90களில் தொடங்கி இன்று வரை இளைஞர்களின் கனவு கன்னியாக இருப்பவர்தான் மும்தாஜ். இவர் டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவருக்கு தற்போது 42 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார்.

நடிகை கௌசல்யா:

Advertisement

கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் கௌசல்யா. அதன் பிறகு முரளி நடிப்பில் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஆன்மீக பயணத்தில் நாட்டம் காட்டியுள்ளதால் நாற்பத்தி மூணு வயதாகியும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளார்.

நடிகை தபு:

Advertisement

பிரபல பாலிவுட் நடிகையான தபு தமிழில் காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் பிரபல பாலிவுட் நடிகரின் காதல் சர்ச்சையில் சிக்கினார். அந்த காதல் தோல்வியால் 51 வயதாகியும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

நடிகை நக்மா:

Advertisement

தமிழில் பிரபுதேவா உடன் காதல், பாட்ஷா, பிஸ்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நக்மா. இவர் கிரிக்கெட் வீரர் கங்குலி மற்றும் சரத்குமார் உள்ளிட்டோருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் விரைவில் 50 வயதை எட்ட உள்ள நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகை கோவை சரளா:

Advertisement

காமெடி என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் மனோரமாவுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது கோவை சரளாதான். காமெடியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சினிமாவில் என்னதான் பிசியாக இருந்தாலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய 61 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

நடிகை சோபனா:

Advertisement

பழம்பெரும் நடிகை பத்மினியின் குடும்பத்திலிருந்து நடிக்க வந்தவர்தான் சோபனா. பரதநாட்டிய கலைஞரான இவர் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 53 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in