LATEST NEWS
சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் குடும்பம் மற்றும் பலரும் பாத்திராத அன்சீன் புகைப்படங்கள்….!!!
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஒருபக்கம் குடும்பம் மறுபக்கம் ஆக்டிங் என்று மேனேஜ் செய்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அது மட்டுமல்லாமல் தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வகையில் மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
இதனிடையே சமீப காலமாக இவர் எந்த சீரியலிலும் கமிட்டாகாத நிலையில் குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதே சமயம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது காயத்ரி யுவராஜின் அழகிய குடும்ப புகைப்படங்கள் மற்றும் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
