LATEST NEWS
அடப்பாவமே இவருக்கா இப்படி ஒரு நிலை?…. மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்… உதவிக்கரம் நீட்டிய தாடி பாலாஜி…!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பாவா லட்சுமணன்.
இவர் பல்வேறு உச்ச காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
வடிவேலுவுடன் சேர்ந்து மாயி திரைப்படத்தில் இவர் நடித்த வாமா மின்னல் காமெடி இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். அதனைப் போலவே அரசு திரைப்படத்தில் குடிகாரன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த கதாபாத்திரமும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இதனிடையே இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் சமீப காலமாக தலைகாட்டாமல் இருந்தார்.இந்நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக அவரின் கால் கட்டை விரலையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் அவர் அளித்த பேட்டியில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் இறந்து விட்டதாக கூறி போஸ்டர் எல்லாம் ஒட்டப்பட்டது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.
தனக்கு இப்படியே ஆனது தெரிந்தவுடன் சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்களும் எனக்கு போன் செய்து விசாரித்தனர். வடிவேலு பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சர்க்கரை மாத்திரை கூட வாங்க முடியாத நிலையில் தான் இருப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் மனம் வருந்தி கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் லட்சுமணனை திரைப்பட நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதே சமயம் அவருக்கு நிதி உதவியும் அவர் செய்துள்ளார்.
எங்கள் கலைத்துறையின் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அண்ணன் பாவா லட்சுமணன் அவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து தனக்கு தெரிந்ததும் மிகவும் வருந்தியதாகவும் நேரில் சென்று உடல் நலம் விசாரித்து உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என கூறியதாகவும் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
அதே சமயம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பாவா லட்சுமணனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் பாவா லட்சுமணனுக்கு நடிகர் தாடி பாலாஜி உதவிக்கரம் நீட்டிய புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Cti0vDMBVDx/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
