LATEST NEWS
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் திருமண நாள் இன்று…கங்கை அமரனின் பலரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இவர் தந்தை டேனியல் ராமசாமி தாய் சின்னத்தாய். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ’16 வயதிலேயே’ படத்தில் ‘செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே’ என்ற பாடலை எழுதி தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்தார்.
அதை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தனர். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் மீண்டும் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ‘பூவரம்பூ பூத்தாச்சு’ என்ற பாடல்களில் எழுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
அதை தொடர்ந்து இவர் அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், நிழல்கள், ஜானி, குரு, விக்ரம், கோவா,வில்லு பாட்டுக்காரன் போன்ற பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து இவர் மௌன கீதங்கள்,ராமையே வயசுக்கு வந்துட்டா, என் பிரியமே, இமைகல், நல்லதெல்லாம் பௌர்ணமி, நிச்சயம், நீதிபதி, சின்னதம்பி பெரியதம்பி, ஜீவா, கபாலி போன்ற பல படங்கள் இசையமைத்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘புதிய வரப்புகள்’ என்ற படத்திற்கு பாக்யராஜுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவர் கோழி கூவுது என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக புது அவதாரம் எடுத்தார். இப்படமானது 250 நாட்களும் கடந்து திரையரங்குகளில் ஓடியது.
அதை தொடர்ந்து இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், அண்ணனுக்கு ஜே, வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன். போன்ற பல படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
பாடகர் கங்கை அமரன் மணிமேகலை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்குனர் மற்றும் நடிகர்.
இவரது இரண்டாவது மகன் பிரேம்ஜி பல படங்களில் நடித்துள்ளார் . இவரது மனைவி உடல்நிலை குறைவினால 2021 ஆம் ஆண்டு காலமானார்.இன்று பாடகர் கங்கை அமரன் திருமண நாள். இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
