LATEST NEWS
10 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த தேவதை… வித்தியாசமாக மகளுக்கு பெயர் சூட்டிய ராம்சரண் – உபாசனா ஜோடி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ராம்சரண் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ராம்சரண் மற்றும் உபசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் சிரஞ்சீவி குடும்பமே தற்போது மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ராம்சரண் உபசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று ராம்சரண் மற்றும் உபசனா மகளுக்கு பிரம்மாண்டமாக பெயர் சூட்டு விழா நடைபெற்றது. தங்களின் அழகான பெண் குழந்தைக்கு க்ளின் காரா கோனிடேலா என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராம்சரண் மற்றும் உபசனா தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
