LATEST NEWS
அன்பில் மகேஷ் ஜெயிலுக்கு போக வேண்டிய ஆள் தான்.. யாரும் கவலைப்படாதீங்க… நானே 7 லட்சம் கொடுத்திருக்கேன்… போட்டுடைத்த திமுக துணைத் தலைவரின் பகீர் ஆடியோ..!!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.100 கோடி லஞ்ச மோசடி வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற திமுக துணைத் தலைவர் ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஒரு பகீர் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த ஆடியோவில், “அன்பில் மகேஷ் கைதானது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம்; அவர் கண்டிப்பாக ஜெயிலுக்குப் போக வேண்டிய ஆள்தான்” என்று ஜாகீர் உசேன் மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார் . மேலும், தனது ஆசிரியை மனைவியின் பணி மாறுதலுக்காக தலைமை ஆசிரியர் மற்றும் அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் மூலமாக அன்பில் மகேஷுக்குத் தான் மட்டுமே ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .
ஒரு சொந்தக் கட்சிக்காரனுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மற்ற பொதுமக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள் என்று ஆவேசப்பட்டுள்ள அவர், இந்த லஞ்சப் புகாரை தான் எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார் வலசை செட்டிப்பட்டியில் மட்டும் 11 ஆசிரியர்கள் தலா ரூ.7.5 லட்சம் கொடுத்துத்தான் மாறுதலில் வந்துள்ளனர் என்றும் l, இதற்கான டிஜிட்டல் ஆவணங்கள் பலவற்றைத் தான் சென்னை தலைமை வரை கொண்டு சேர்த்துள்ளதாகவும் அவர் பேசியிருப்பது இந்த மெகா ஊழல் வழக்கில் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது
