LATEST NEWS
அப்படிப்போடு..! இனி இலவசமாகக் கிடைக்கும் ரூ.1.8 லட்சம் மதிப்பிலான லேப்டாப்..!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் பரிசு..!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நிதியமைச்சகம் தனது சாதன கொள்முதல் கொள்கையில் அதிரடியான திருத்தங்களைச் செய்துள்ளது. புதிய விதிகளின்படி, தகுதியான மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய அலுவலக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் இதர மின்னணு சாதனங்களை 4 ஆண்டுகள் முழுமையாகப் பயன்படுத்திய பிறகு, எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்முதல் கொள்கையின் கீழ், அலுவலக பயன்பாட்டிற்காக வாங்கப்படும் மின்னணு சாதனங்களின் விலை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான சாதனங்களுக்கு அதிகபட்ச விலை வரம்பு ரூ. 1.5 லட்சமாகவும், அதுவே ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புப் பங்களிப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் கொண்ட சாதனங்களாக இருந்தால் அவற்றுக்கான விலை வரம்பு ரூ. 1.8 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையானது அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரி வழங்கப்படாமல், ஊதிய நிலையின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பே லெவல் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையாகவும், பே லெவல் 8 முதல் 11 வரையிலான அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சதவீத அளவிலும் இந்த சாதனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், 4 ஆண்டுகள் முடிவதற்குள் பணியை விட்டு விலகுபவர்கள் அல்லது ஓய்வு பெறுபவர்கள், குறிப்பிட்ட தேய்மான மதிப்புக் கட்டணத்தைச் செலுத்திவிட்டுச் சாதனங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
