LATEST NEWS
“ரஷ்யா போறீங்களா..? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க..! ரஷ்யா விலைவாசியைப் பார்த்து ஷாக்கான இந்திய வ்லாகர்..!!!”
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ரஷ்யா தொடர்பான ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், இந்திய டிராவல் வ்லாகர் ஒருவர் ரஷ்யாவின் ஒரு சிறிய மளிகைக் கடைக்குச் சென்று அங்குள்ள அன்றாடப் பொருட்களின் விலையைக் காட்டியுள்ளார். அங்கு மொழி தெரியாமல் அவர் தண்ணீர் பாட்டில் கேட்க, கடைக்காரர் எலுமிச்சைத் தண்ணீர் கொடுக்க முயன்றபோது, அவருடன் இருந்த உள்ளூர் ரஷ்யப் பெண்மணி சைகை மூலம் சாதாரணக் குடிநீரை வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
இந்த வீடியோவில் அந்த வ்லாகர் ரஷ்யாவின் விலைவாசியை இந்தியாவின் விலையோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். ரஷ்யாவில் ஒரு லிட்டர் சாதாரணத் தண்ணீர் பாட்டிலின் விலை 30 ரூபிள் ஆகும், இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.40 ஆகும். இந்தியாவில் இதே தண்ணீர் பாட்டில் ரூ.10 முதல் ரூ.20-க்குள் கிடைத்துவிடும். அதேபோல, அவர் வாங்கிய 4 வாழைப்பழங்கள் மற்றும் ஒரு சிறிய தயிர் பாக்கெட்டின் விலை சுமார் 200 ரூபிள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.300 ஆகும். ஆனால், இந்தியாவில் ₹300 என்ற தொகைக்குச் சில டஜன் வாழைப்பழங்களை மிக எளிதாக வாங்கிவிடலாம் என்று வ்லாகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/Davh8uRSzQX/?utm_source=ig_web_button_share_sheet
ரஷ்யாவில் பழங்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை இந்தியாவின் விலையை விட மிக அதிகமாகவே உள்ளது. இதனால் ஒரு இந்தியர் முதல்முறையாக ரஷ்யாவிற்குச் சுற்றுலா அல்லது கல்வி நிமித்தமாகச் செல்லும்போது, அங்குள்ள அன்றாடப் பொருட்களின் விலையைப் பார்த்து சற்றே அதிர்ச்சியடைய வாய்ப்புள்ளது என்று வ்லாகர் விவரித்துள்ளார். ரஷ்யாவின் இந்த மளிகைப் பொருட்கள் விலை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு, பல்வேறு கருத்துகளுடன் வைரலாகி வருகிறது.
