LATEST NEWS
“பைக்குள்ள ஏதோ அசையுது!… திறந்தது பார்த்ததும் அலறிய மாணவன்… கடைசியில் நடந்த அந்த ட்விஸ்ட்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு குழந்தைகள் மரண பயத்தில் அலறினர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அங்கு நின்ற ஆசிரியர் சுயநலமின்றி, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்று குழந்தையைக் காப்பாற்றினார். புத்தகப் பையில் இருந்த விஷப்பாம்பையும் பத்திரமாக அகற்றினார். அன்று அந்த ஆசிரியர் வெறும் பாடம் நடத்தும் குருவாக மட்டுமல்லாமல், அந்த சிறுவனுக்கு மறுஜென்மம் கொடுத்த கடவுளாகவே மாறினார்.
மழைக்காலத்தில் இதுபோன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பள்ளி வளாகங்களில் தேவையற்ற புதர்கள், குப்பைகள் அல்லது படர்ந்துள்ள புற்கள் இல்லாமல் சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். மேலும், இந்த வீடியோவில் காட்டியுள்ளது போல குழந்தைகளைத் தரையில் அமர வைத்துப் படிக்க வைப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பான மேசைகள் அல்லது இருக்கைகளில் அமர வைத்துப் பாடம் நடத்துவது இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க உதவும். பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மழைக்காலங்களில் கூடுதல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டியது இன்றியமையாதது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
