actor Vijay viral video/நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல்
Connect with us

LATEST NEWS

நீங்க அடிச்சா மட்டும் சிக்ஸா..? ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய விஜய்.. வைரலான கியூட் வீடியோ..!!

Published

on

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்தார். மேலும் சரத் குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் பாடல் ஆசிரியர் விவேக் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Advertisement

அந்த வீடியோவில் நடிகர் விஜய், ரஷ்மிகா, ஷ்யாம், யோகி பாபு உள்ளிட்டோர் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிரணியினர் கூறியுள்ளனர். உடனே நீயும் அதே இடத்தில் தான் அடிச்சு சிக்சர்னு சொன்ன? இதுவும் சிக்ஸர் தான் என விஜய் செல்லமாக சண்டை போடுகிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement