நீண்ட நாள் பயத்தை போக்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார்… அதுவும் எப்படி தெரியுமா?… வைரல் வீடியோ…!! - cinefeeds
Connect with us

VIDEOS

நீண்ட நாள் பயத்தை போக்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார்… அதுவும் எப்படி தெரியுமா?… வைரல் வீடியோ…!!

Published

on

நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் அனைத்து விஷயங்களையும் தைரியமாக கையாளும் வரலஷ்மிக்கு ஒரு விஷயம் இது பயம் இருந்த நிலையில் அந்த பயத்தை தற்போது போக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கும் சில மன தடைகள் இருந்தது.

ஆனால் அந்த பயத்தை போக்கி பைக் ஓட்ட கற்றுக் கொள்ள இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தேன். முதலில் கொஞ்சம் கவலை மற்றும் பயம் ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு என்னுடைய பயிற்சியாளர் மிகச்சிறந்த முறையில் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று கூறி பைக் ஓட்டும் வீடியோவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Varalaxmi Sarathkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@varusarathkumar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in