11 வயசிலேயே கோடியில் சம்பளமா?… அப்பாவையே மிஞ்சும் மகேஷ் பாபுவின் மகள்… அசந்து போன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

11 வயசிலேயே கோடியில் சம்பளமா?… அப்பாவையே மிஞ்சும் மகேஷ் பாபுவின் மகள்… அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இதனிடையே அவரின் வீட்டில் அம்மா, அப்பா மற்றும் அண்ணன் என அடுத்தடுத்து மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது.

Advertisement

இவர்களின் மறைவில் மிகவும் பாதிக்கப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தான். இந்நிலையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தற்போது விளம்பர மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஒரு நகைக்கடைக்கு அவர் மாடலாக போஸ் கொடுத்துள்ள நிலையில்  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள பிரபலமான இடத்தில் அந்த விளம்பரம் தற்போது வைக்கப்பட்டுள்ளது.இந்த விளம்பரத்திற்காக சித்தாரா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

sitara 🍓 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sitaraghattamaneni)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in