திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படியா?…. விஜய் டிவி பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள்…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படியா?…. விஜய் டிவி பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர்.இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.

முதன்முதலாக ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தில் ரோபோ சங்கர் அறிமுகமானார்.  தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

இவரின் மனைவி விஜய் டிவியின் குவித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வருகிறார். அதனைப் போலவே இவரின் மகள் இந்திரஜா சங்கரும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் உடன் பிகில், கார்த்தி உடன் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது காதலருடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திரஜாவின் திருமணம் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் டிவி பிரபலத்துடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோவை இந்திரஜா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in