நடிகர் வடிவேலுவின் தம்பி உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… இவரும் பிரபல நடிகரா?… வருந்தும் திரையுலகம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் வடிவேலுவின் தம்பி உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… இவரும் பிரபல நடிகரா?… வருந்தும் திரையுலகம்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்த நிலையில் அதே சமயம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு உடன் பிறந்த சகோதரர் ஒருவர் உள்ளார். அதாவது வடிவேலுவின் தம்பியான ஜெகதீசன் என்பவர் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் கல்லீரல் செயல் இழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது இல்லத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement