என்னது விஜயகாந்த் சொத்து மதிப்பு இவ்வளவுதானா?.. என்னப்பா சொல்றீங்க இத்தனை வருஷமா இவ்வளவுதான் சம்பாதிச்சாரா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது விஜயகாந்த் சொத்து மதிப்பு இவ்வளவுதானா?.. என்னப்பா சொல்றீங்க இத்தனை வருஷமா இவ்வளவுதான் சம்பாதிச்சாரா..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்களை சந்தித்தபோது அமரக்கூட முடியாமல் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தார். அதனைக் கண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர். அதனால் அரசியல் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் ஆகியோர் பார்த்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் தற்போது விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்துக்கு 40 முதல் 50 கோடி தான் சொத்து உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை வைத்து பார்த்தால் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் போன்ற நடிகர்களை விட விஜயகாந்தின் சொத்து மதிப்பு மிக குறைவாகவே உள்ளது. ஆனாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in