LATEST NEWS
எனக்குள் இருந்த கனவை விஜயின் மகன் தட்டி எழுப்பிட்டாரு.. நடிகர் விஷால் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவர் பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரின் கீழ் படங்களை தயாரித்து வருகிறார்.
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்த விஷால் அதன் பிறகு நடிகராக செல்லமே திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு மற்றும் தாமிரபரணி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிசியான நடிகராக மாறிவிட்டார்.இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், நடிகர் விஜய்யின் ரசிகர் என்பதில் தனக்கு பெருமை எனவும் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும் அதன் பிறகு அது குறித்து பேசலாம் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து விஜயின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனராக என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில் அது குறித்து பேசிய விஷால், விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனக்குள் இருந்த இயக்குனர் கனவை விஜய் மகன் தற்போது மீண்டும் தட்டி எழுப்பியுள்ளதால் தானும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். தற்போது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க