மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுடன் எளிமையாக 44 வது பிறந்த நாளை கொண்டாடிய ஜில்லுனு ஒரு காதல் பூமிகா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுடன் எளிமையாக 44 வது பிறந்த நாளை கொண்டாடிய ஜில்லுனு ஒரு காதல் பூமிகா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் நடித்த பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

டெல்லியை சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

அடுத்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

Advertisement

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்காத நிலையில் மற்ற மொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி குடும்பத்தை கவனித்து வந்த இவர் மீண்டும் படங்களில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பூமிகா தன்னுடைய பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் கொண்டாடி வரும் நிலையில் கடந்த வருடம் தன்னுடைய 43வது பிறந்த நாளை ஊட்டியில் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

Advertisement

இதனை தொடர்ந்து இந்த வருடம் தன்னுடைய 44வது பிறந்த நாளை பூமிகா மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in