தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இந்த சிறு வயது பிரபலம் யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இந்த சிறு வயது பிரபலம் யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!

Published

on

கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சந்திரிகா ரவி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டில் மாடலாக பணியை தொடங்கிய சந்திரகா ரவி பாலிவுட் டுடே ஹாலிவுட் என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சந்திரிகா ரவி தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

Advertisement

இதனை அடுத்து செய் என்ற திரைப்படத்திலும் சந்திரிகா நடித்தார். பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவான உன் காதல் இருந்தால் திரைப்படத்திலும் நடித்தார். முக்கியமாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரிகா ரவி நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு சில்க் ஸ்மிதா தி அன் டோல்ட் ஸ்டோரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் குறித்த அப்டேட் ஏற்கனவே வெளியானது. சில்க் ஸ்மிதாவை போல உருவத்தோற்றம் இருப்பதால் சந்திரிகா ரவி சில்க் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சந்திரிகா ரவியின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சந்திரிகாவா இது சின்ன வயதில் க்யூட்டாக இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement