அம்பானி மகன் திருமணத்திற்கு வரும் விஐபிகள் மற்றும் விருந்தாளிகள் தங்கும் அறை எப்படி இருக்கும் தெரியுமா..? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன..? வெளியான வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்பானி மகன் திருமணத்திற்கு வரும் விஐபிகள் மற்றும் விருந்தாளிகள் தங்கும் அறை எப்படி இருக்கும் தெரியுமா..? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன..? வெளியான வீடியோ..!!

Published

on

முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய சடங்குகள், கொண்டாட்டங்கள் மார்ச் 1 நேற்று முதல் 3-ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெறுகிறது. இதற்காக ரிலையன்ஸ் குடும்பத்தின் சார்பில் 2500 ஏக்கர் நிலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழாவை முன்னிட்டு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பத்தினர் விருந்து அளித்துள்ளனர்.

Advertisement

மேலும் விருந்தினர்களுக்காக 2500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக தலைசிறந்த சமையல் கலைஞர்கள் கொண்ட குழுவினர் ஜாம்நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் விருந்தில் இடம்பெறும் உணவு வகைகள் மறுநாள் இடம் பெறாத வகையில் உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறை எப்படி இருக்கும்? அதில் என்னென்ன வசதிகள் உள்ளது? என்பது பற்றி ஒரு வீடியோ வெளியானது. அதில் அழகாக கூடாரம் அமைத்து விருந்தினர்கள் அமரும் வகையில் சோபா, கட்டில், டிவி டேபிள் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பொதுமக்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by SAINA NEHWAL (@nehwalsaina)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in