LATEST NEWS
உங்கள குடும்ப குத்து விளக்குன்னு நினைச்சோம்; ஆனா இப்படியா..? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!
சின்னத்திரை நடிகையான கோமதி பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். இவர் இயல்பான தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அந்த சீரியலில் ஹீரோ வெற்றி வசந்துக்கும், கோமதி பிரியாவிற்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது செம்பநீர்ப்பூவு என்ற மலையாள சீரியலிலும் கோமதி பிரியா நடித்து வருகிறார். கோமதி பிரியாவுக்காகவே சிறகடிக்க ஆசை சீரியலை பார்ப்பவர்களும் உண்டு.
தமிழ் சீரியல் மட்டும் இல்லாமல் தெலுங்கு சீரியலிலும் கோமதி பிரியா நடித்து வருகிறார். முன்னதாக கோமதி பிரியா ஹிட்லர் காரி பெல்லம் என்ற சீரியல் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். எப்போதுமே மேக்கப் இல்லாமல் குடும்ப பங்கான தோற்றத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கோமதி பிரியா.
இந்த நிலையில் மாடர்ன் உடையில் கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களை குடும்ப குத்து விளக்கு கோமதி பிரியாவா இது? நீங்களும் இப்படி மார்டன் உடையில் இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram