“நான் ரெடியா தான் இருக்கேன்”.. போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பற்றி இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ வைரல்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் ரெடியா தான் இருக்கேன்”.. போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பற்றி இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

Published

on

இயக்குனர் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன் திரைப்படம் உருவாகிறது. இதனை ஜாபர் சாதிக் என்பவர் தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து போதை பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ வேதிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போதை பொருட்களை கடத்தியதாக கூறி போலீசார் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லியில் வைத்து கைது செய்தனர். இது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் அமீர் மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் அமீர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, இறைவன் மிகப்பெரியவன் படம் தயாரிப்பாளர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அதன் பிறகும் சிலர் தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களிலும் ஊடகங்களிலும் அந்த குற்ற செயலோடு என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இது போன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தை நான் பின்பற்றுபவன். என்னை இது போன்ற குற்ற செயல்களோடு தொடர்பு படுத்தி பேசுவதால் எனது பெயருக்கு தான் களங்கம் ஏற்படுத்த முடியும்.

எனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியும். வேறு எந்த பயனையும் அவர்கள் அடைய முடியாது. நீங்கள் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இருக்கின்றனர். எப்போது என்னை விசாரணை அழைத்தாலும் நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். இந்த சோதனையான காலகட்டத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் இறைவன் மிகப்பெரியவன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement