செம மாஸ்!… நம்ம கீர்த்தி சுரேஷா இது?… புல்லட் வண்டியை சும்மா சூப்பரா ஓட்டுறாங்களே… மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி… - cinefeeds
Connect with us

LATEST NEWS

செம மாஸ்!… நம்ம கீர்த்தி சுரேஷா இது?… புல்லட் வண்டியை சும்மா சூப்பரா ஓட்டுறாங்களே… மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி…

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.


இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வடிவேலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உலக அளவில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் முதல் நாளில் ஏழு கோடி வசூல் செய்த நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 40 கோடி வரை வசூலை குவித்துள்ளது.

Advertisement

மாமன்னன் திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேசமயம் தனது கடைசி படமான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். பகத் பாசில் நடிப்பை ரசிகர்கள் அனைவருமே பாராட்டியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாட சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு உதயநிதி ஸ்டாலின் காரை பரிசாக வழங்கினார்.

 

Advertisement

 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மாமன்னர் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாமன்னன் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்ராசிட்டிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in