புத்தாண்டுக்கு புதிய காரை வாங்கிய நடிகை யாஷிகா…. விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா….????? - cinefeeds
Connect with us

LATEST NEWS

புத்தாண்டுக்கு புதிய காரை வாங்கிய நடிகை யாஷிகா…. விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா….?????

Published

on

தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இன்றைய இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்ய தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் யாஷிகா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். புத்தாண்டு ஸ்பெஷல் ஆக Volkswagen virtus காரின் டாப் எண்டு மாடல் விலை சுமார் 22.5 லட்சம் என்று கூறப்படுகிறது. யாஷிகா வாங்கிய புதிய காரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in