LATEST NEWS
பாஸ்.! நீங்க தனியா நின்னா சேப்பாக்கத்துல கூட மண்ணை கவ்வியிருப்பீங்க… திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமல் திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கூட அக்கட்சி தோல்வியைத் தழுவியிருக்கும் என்று அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கிதான் திமுகவின் வெற்றிக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விமர்சனத்தில், கூட்டணிக் கட்சிகள் அளித்த 15 சதவீத வாக்கு வரத்துதான் திமுகவின் வெற்றிப் பங்களிப்பாக இருந்தது என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகச் சென்னையில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் திமுகவிற்குச் சாதகமாக அமைந்ததற்கு இந்த வலுவான கூட்டணியே முக்கியக் காரணம் என்றும், அந்த ஆதரவு இல்லாத பட்சத்தில் திமுகவினால் இந்த அளவுக்கு இடங்களைக் கைப்பற்றியிருக்க முடியாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
மேலும், திராவிடப் பேரியக்கமான திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் பலத்தால்தான் தொடர்ந்து தேர்தல்களில் வென்று வருவதாகக் கூறிய அவர், தனித்து களம் காணும் தைரியம் திமுகவிற்கு உள்ளதா என்ற சவாலையும் முன்வைத்துள்ளார். இத்தகைய கூட்டணிக் கட்சிகளின் வாக்கு பலம் மட்டும் தங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால், எந்தக் காலத்திலும் திமுகவால் ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாகக் கூட சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா மிகத் தீவிரமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
