LATEST NEWS
இதெல்லாம் ரொம்ப ஓவர்…. அவளுக்கு மட்டும் அதை கொடுத்துட்டு நீங்க நல்லா வெளுத்து கட்டுறீங்களே…. மகாலட்சுமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது.
அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சீரியலில் நடிப்பதையும் தாண்டி பிராண்ட் விளம்பரத்திலும் ஈடுபட்டு அதிலும் பணம் சம்பாதித்து வருகிறார் மகாலட்சுமி. தற்போது அவர் விதவிதமான உணவுகளை சாப்பிடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கணவருக்கு மட்டும் தீஞ்ச முட்டை உங்களுக்கு மட்டும் விதவிதமான உணவா என கலாய்த்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
