டாடா பட புகழ் அபர்ணா-க்கு கல்யாணமா!… அதுவும் மஞ்சுமேல் பாய்ஸ் நடிகருடனா?… யாருப்பா அவரு?…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

டாடா பட புகழ் அபர்ணா-க்கு கல்யாணமா!… அதுவும் மஞ்சுமேல் பாய்ஸ் நடிகருடனா?… யாருப்பா அவரு?…!!!

Published

on

பிஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த அபர்ணா மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் பிஸ்ட் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்அபர்ணாதாஸ். பீஸ்ட் திரைப்படத்தை காட்டிலும் இவருக்கு டாடா திரைப்படம் மிக பெரிய வரவேற்பை கொடுத்திருந்தது.

#image_title

இவர் முதன் முதலில் பிரகாசம் என்ற மலையாள திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு மலையாளத்தில் மனோகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். டாடா திரைப்படத்தின் மூலமாக தமிழில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

#image_title

இருந்தும் பெரிய வாய்ப்புகளை இதுவரை ஒப்புக்கொள்ளாத அபர்ணாதாஸ் தற்போது காதல் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர் காதலிக்கும் நபரும் மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகர் தான். இவர் மஞ்சுமேல் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் தீபக் பரம்பொருள்தான். இவர்கள் திருமணம் வருகிற ஏப்ரல் 24ம் தேதி வடக்கஞ்சேரியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

#image_title

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in