பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்…. பதறிப்போன சக போட்டியாளர்கள்…. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்…. பதறிப்போன சக போட்டியாளர்கள்…. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என கமல்ஹாசன் கோபமாக கூறிய நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓரளவு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அதேசமயம் இந்த வாரம் அசீம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் இவரின் அட்டகாசம் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது. ஏலியன்ஸ் மற்றும் பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்டில் இந்த வாரம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அசீம் இதில் நடந்து கொள்ளும் விதம் சிலரை மகிழ்வித்தாலும் பலரை கோபமடைய வைத்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் தற்போது வீட்டிற்குள் நடைபெற்று வரும் டாஸ்கின் போது திடீரென இரத்த அழுத்தம் காரணமாக அசீம் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு பதறிப் போன சக போட்டியாளர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். தற்போது அவர் நலமாக உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/thamee_thammu/status/1597994886095335425

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in