தனியாக இருந்த 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த அவலம்…நடுராத்திரியில் நடந்த கொடூரம்… விடாமல் அதிகாலையிலும் புகுந்த வாலிபர்… கள்ளக்குறிச்சி மூதாட்டி வழக்கில் வெளியான திடுக்கிடும் உண்மை…கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனியாக இருந்த 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த அவலம்…நடுராத்திரியில் நடந்த கொடூரம்… விடாமல் அதிகாலையிலும் புகுந்த வாலிபர்… கள்ளக்குறிச்சி மூதாட்டி வழக்கில் வெளியான திடுக்கிடும் உண்மை…கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தில், தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரிடம் நள்ளிரவிலும் அதிகாலையிலும் இருமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்து, மகளும் திருமணமாகிச் சென்றுவிட்ட நிலையில், அந்த மூதாட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்துகொண்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மூதாட்டி தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து, மூதாட்டிக்கு ஆறுதல் கூறி உறங்க வைத்த கிராம மக்கள், ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமா என்ற சந்தேகத்தில் அவரது வீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

Advertisement

அவர்கள் பயந்தது போலவே, அதிகாலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மீண்டும் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அந்த மர்ம நபர், அவரிடம் மறுபடியும் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது வீட்டை கண்காணித்து வந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து வடபொண்பரப்பி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அருகில் உள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in