ஒரு வழியா முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ்…. ப்ரோமோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…. – cinefeeds
Connect with us

VIDEOS

ஒரு வழியா முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ்…. ப்ரோமோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….

Published

on

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பாரதிக்கு திடீர் விபத்து நிகழ்ந்து அவர் பழைய விஷயங்களை எல்லாம் மறந்து மீண்டும் சீரியல் ஒரு புதிய பாதையை நோக்கி சென்றது.

பின்னர் பாரதிக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மீண்டும் வர பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டனர். ஆனால் அப்போதும் எபிசோடு இறுதியில் தொடரும் என போட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ளது. பாரதி மற்றும் கண்ணமா இருவரும் மீண்டும் திருமணம் செய்து வைப்பது தான் இறுதி கிளைமாக்ஸ்.

Advertisement

திருமணத்திற்கு அனைவரும் உடை எடுப்பதற்கு செல்ல முகூர்த்த புடவையை பாரதி தானே தயாரிக்கும் வேலையில் இறங்குகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் பாரதி டாக்டர் வேலையை தவிர மற்ற அனைத்து வேலையையும் செய்வார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

vijaytvfamily இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@serial_vijay_tv2)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in