LATEST NEWS
EXCLUSIVE : BIGGBOSS-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்….. Final லிஸ்ட் ரெடி….. இதோ உங்களுக்காக….!!!!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு எப்போது தொடங்கும் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் 11 முதல் 20 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இறுதி செய்யப்பட்டுள்ள 10 பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வி.ஜே மகேஸ்வரி, நடிகை ஆயிஷா, நடிகை விசித்ரா, நடிகை ரட்சிதா, நந்தினி, திவ்யதர்ஷினி, ரவீந்தர், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஜிபி முத்து, அமுதவாணன் உள்ளிட்ட நடிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் பலரும் இவர்கள் மட்டுமல்லாமல் ரக்சன், ரோஷினி ஹரிப்ரியன், ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, ராஜலட்சுமி, கார்த்திக், இமான் முன்னாள் மனைவி ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இதில் எது உண்மை என்பது இன்னும் ஆறு நாட்களில் தெரிந்துவிடும். இதற்காக பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
