கால்பந்து உலகின் மெகா ஆச்சரியம்..! வெறும் ஒரு சட்டை 47 கோடியா..? உலகையே உலுக்கிய பிரேசில் ஜாம்பவான் பீலேயின் வரலாற்று ஏலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கால்பந்து உலகின் மெகா ஆச்சரியம்..! வெறும் ஒரு சட்டை 47 கோடியா..? உலகையே உலுக்கிய பிரேசில் ஜாம்பவான் பீலேயின் வரலாற்று ஏலம்..!!

Published

on

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானான பிரேசிலின் பீலே, 1958-ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெர்சி தற்போது நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் ரூ.47 கோடிக்கு ($4.9 மில்லியன்) ஏலம் போயுள்ளது. நியூயார்க்கின் பிரபல ஏல நிறுவனமான ‘சோத்பீஸ்’ நடத்திய இந்த ஏலத்தில், பீலேயின் ஜெர்சியை வாங்குவதற்குப் பலரும் கடுமையான போட்டி போட்டனர். கால்பந்து வரலாற்றில் பீலேவின் விளையாட்டுப் பொருட்களிலேயே மிக அதிக தொகைக்கு ஏலம் போன பெருமையையும் இந்த ஜெர்சி தற்பொழுது பெற்றுள்ளது.

கடந்த 1958-ம் ஆண்டு ஸ்வீடனுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், வெறும் 17 வயதே நிரம்பிய இளம் வீரரான பீலே 2 கோல்களை அடித்து பிரேசில் அணி தனது முதல் உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தார். அந்தப் போட்டியில் அவர் அணிந்திருந்த இந்த நீல நிற ‘எண் 10’ ஜெர்சி, போட்டியின் முடிவிற்குப் பிறகு அவரது சக வீரரான டிடாவின் குடும்பத்தினரால் பல தசாப்தங்களாகப் பத்திரமாகப் பாதுகாத்து வரப்பட்டது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பீலேயின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளதால், இந்த ஜெர்சிக்கு சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய மதிப்பு கிடைத்துள்ளது.

Advertisement

இதற்கு முன்னர், கடந்த 2022-ம் ஆண்டில் அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனா 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அணிந்திருந்த ‘ஹேண்ட் ஆஃப் காட்’ ஜெர்சி சுமார் ரூ.70 கோடிக்கு ஏலமாகி உலக சாதனை படைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது ஜெர்சி என்ற வரலாற்றுப் பெருமையை தற்பொழுது பீலேயின் இந்த ஜெர்சி தன்வசப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in