LATEST NEWS
“போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்” ஆளுங்கட்சிக்கு வந்த ரகசிய எச்சரிக்கை.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் சி.எம் விஜய்.. தவெக நிர்வாகிகளுக்கு செக்..?
நாகப்பட்டினத்தில் சுமார் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் (DRI) அண்மையில் கைது செய்யப்பட்டார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குடன் தொடர்புடைய இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக-வின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு மாநில உளவுத்துறை அனுப்பியுள்ள சமீபத்திய ரகசிய அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறையின் அந்த எச்சரிக்கை அறிக்கையில், தவெக கட்சியின் பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பின்னணிகள், அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து முறையான குற்றப் பின்னாய் செய்யப்படாமல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகளின் தற்போதைய தொடர்புகள் மற்றும் ரகசிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தி, கட்சியில் உள்கட்டமைப்பு ரீதியான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால் வரும் காலங்களில் அரசுக்கும் கட்சிக்கும் மிகப்பெரும் சட்ட ஒழுங்கு மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகள் உருவாகலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
