LATEST NEWS
அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….????
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.
ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்க் கொடுத்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக போட்டிகளை விளையாடி வருகிறார்கள். இதனிடையே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அதன்படி நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதாவது மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற ராம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளொன்றுக்கு 15,000 முதல் 22,000 வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
