LATEST NEWS
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நாயகன்… 30 வருடத் திரை பயணம்…. கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் சங்கர்.. வெளியான புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வருபவர் சங்கர். இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தொழில்நுட்ப நுண்ணறிவு, பிரம்மாண்டம் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட படங்களாகவே அமைந்துள்ளன.
இவர் முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. இதுவரை 13 திரைப்படங்களை சங்கர் இயக்கியுள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து மக்களை வெகுவாக கவர்ந்தவர்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் அழுத்தமான முக்கியமான திரைப்படங்களை தயாரித்தும் பெயர் பெற்றுள்ளார்.
தற்போது இயக்குனர் சங்கர் ஒரே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் லைகா தயாரிப்பில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தையும், தெலுங்கு மற்றும் தமிழில் ராம்சரண் நடித்த வரும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.
புதுப்புது முயற்சிகள் மூலமாக தொழில் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை இயக்குனர் சங்கர் பெற்று தருவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் தரத்தை படத்திற்கு படம் உயர்த்தி கொண்டே வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் அவருடைய 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது ரசிகர்களும் சகா திரைப்படங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் நேற்று பிரம்மாண்ட கொண்டாட்டம் நடந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
