“CM விஜய்யை நாய், பிணம்” என்று கொச்சையாக பேசிய விவகாரம்… திமுக பெண் கவுன்சிலர் மீது பாய்ந்தது வழக்குப்பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM விஜய்யை நாய், பிணம்” என்று கொச்சையாக பேசிய விவகாரம்… திமுக பெண் கவுன்சிலர் மீது பாய்ந்தது வழக்குப்பதிவு..!!

Published

on

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் இழிவாகப் பேசிய விவகாரத்தில், சென்னை மாமன்ற திமுக கவுன்சிலரும் அக்கட்சியின் மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளன் மீது சென்னை எஸ்பிளனேடு காவல் துறையினர் முறைப்படி FIR பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் துறைமுகம் பகுதிச் செயலாளர் உதயகுமார் சென்னை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக மகளிர் தொண்டரணி முப்பெரும் விழாவில் சுதா தீனதயாளன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தோற்றம் குறித்து விமர்சிக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யை “நாய்” என்றும் அவரது உடல் தோற்றத்தை “பிணம்” என்றும் மேடையில் மிகக் கொச்சையான வார்த்தைகளால் ஒருமையில் விமர்சித்துப் பேசினார். இந்த அவதூறுப் பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அரசியல் கொந்தளிப்பையும், தவெக தொண்டர்களின் கடுமையான எதிர்ப்புகளையும் கிளப்பியது.

Advertisement

மக்களாட்சியில் அரசியல் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது எனக் குறிப்பிட்டு தவெக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் திமுகவின் இந்த அநாகரிகப் பேச்சுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே, சுதா தீனதயாளன் மேடையில் வரம்பு மீறிப் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கு அமர்ந்திருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அவரது பேச்சால் முகம் சுளித்து சங்கடமடைந்ததோடு, அவரை அ மேடையிலேயே கண்டித்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளும் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in