LATEST NEWS
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?….. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 10 நாளில் 45 கோடி வரை வசூல் செய்தது. இன்றும் பல திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றார். ஆனால் இவர் முதல் முதலாக நடித்த திரைப்படத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். இந்த தகவலை சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய நிலையில் தற்போது இந்த செய்தி இணையத்தில் உலா வருகிறது.
