பிரண்ட்ஸ் படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்த சிறுவன் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரண்ட்ஸ் படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்த சிறுவன் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிரண்ட்ஸ். இந்தத் திரைப்படத்தில் காமெடி நடிகராக வடிவேலுவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இன்றும் அதில் வரும் காமெடிகள் பல தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா கதாபாத்திரத்தின் சிறுவயது பிளாஷ்பேக் ஒன்று வரும். அதில் சிறு வயது விஜயாக பரத் ஜெயந்த் என்பவர் நடித்திருப்பார்.

அவர் இடையில் நடிப்புக்கு முழுக்கு போட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்ற இவர் மாடலாகவும் பணியாற்றி வருகின்றார். அதன் பிறகு விக்ரமின் இளமை நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதர்வா மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்நிலையில் சிறுவயதில் பார்த்த பரத் இப்போது எப்படி உள்ளார் என்பது குறித்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in