LATEST NEWS
வாரிசு வெற்றியை வேற லெவலில் கொண்டாடிய விஜய்…. அதுவும் எங்கு தெரியுமா?…. வெளிவந்த புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வையாளர்களையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து மாபெரும் சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் குழுவினர் அனைவரும் தங்களின் வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் விஜயும் கலந்து கொண்ட நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
