அம்மாடியோ இத்தனை கோடியா?…. பிரபல நடிகர் ராம் சரணின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. பிரபல நடிகர் ராம் சரணின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….????

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ராம்சரண் வெளியிட்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவரின் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் ராம்சரனின் முழு சொத்து மதிப்பு குறித்த ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இவரின் முழு சொத்து மதிப்பு 1300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் இவரின் வீட்டின் மதிப்பு மட்டும் 40 கோடி ரூபாய். மேலும் இவரிடம் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் உள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in