LATEST NEWS
அடடே நடிகர் கவினா இது?…. கல்லூரி பருவத்தில் நெருங்கிய நண்பருடன் எடுத்துக் கொண்ட பலரும் பார்க்காத புகைப்படம் இதோ…..!!!
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.
இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.
முதல் முதலில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் நடித்த அடுத்த படம் லிப்ட் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் கவின் தன்னுடைய நண்பரும் நடிகருமான பிரதீப்புடன் பல வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.