LATEST NEWS
“வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை”…. மனைவி கண்மணிக்கு வேற லெவலில் வளைகாப்பு நடத்திய சீரியல் நடிகர் நவீன்….. புகைப்படங்கள் இதோ….!!!
சின்னத்திரை செய்தி வாசிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் கண்மணி சேகர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்த நடிகர் நவீனை காதலித்து கண்மணி செய்க திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படங்களும் தேன்நிலவு கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்மணி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.
அவர்கள் முதல் குழந்தையை பெற போவதாக முன்பே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது கண்மணிக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.
அவரின் வளைகாப்பு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை கண்மணி நவீன் தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர்.
