அடடே பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டியா இது?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டியா இது?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் ஆறாவது சீசன் அண்மையில் தான் முடிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலரும் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டனர்.

அப்படி விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அக்ஷாரா ரெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வருன் மற்றும் அக்ஷரா நட்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்து வந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வதும் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் பல செய்தி இணையத்தில் உலா வந்தது. இருந்தாலும் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது தனது ஹேர் ஸ்டைல் மற்றும் லுக்கை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியுள்ளார்.

அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in