“யாரும் சிரிக்காதீங்க, அசிங்கமா கேட்பேன்”…. பிக்பாஸ் வீட்டில் வெடித்தது சண்டை…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

“யாரும் சிரிக்காதீங்க, அசிங்கமா கேட்பேன்”…. பிக்பாஸ் வீட்டில் வெடித்தது சண்டை…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சொர்க்கம் மற்றும் நரகம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு ஒரு ஆளும் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு ஒரு ஆளும் அழைக்க வேண்டும் என்றால் என்ன காரணம் கூறி அழைப்பீர்கள் என்று கேட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் பதில் அளிக்கின்றனர்.

Advertisement

அப்போது கதிரவன் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் எனவும் ஏ.டி.கே சொர்க்கத்திலிருந்து நரகத்திற்கு செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்த போது ஏடிகே கோவம் அடைந்து விட்டார். அப்போது கோபத்தில் யாரும் சிரிக்காதீங்க அசிங்கமா கேட்பேன் என கூறிய நிலையில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் கோபமடைந்து சண்டை முற்றியுள்ளது. இன்றைக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in