“காதலுக்கு அழகு மட்டுமல்ல, வயசும் முக்கியம் இல்ல”.. தன்னைவிட வயதில் பெரிய பெண்களை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்கள்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“காதலுக்கு அழகு மட்டுமல்ல, வயசும் முக்கியம் இல்ல”.. தன்னைவிட வயதில் பெரிய பெண்களை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்கள்…!!

Published

on

தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகர் நடிகைகள் பலரும் தங்களை விட வயது அதிகம் கொண்ட பிரபலங்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அதன்படி காதலுக்கு அழகு முக்கியமில்லை என்பது போல வயதும் ஒரு பொருட்டில்லை என்று தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட 10 பிரபல நடிகர்களின் விவரம் குறித்து இதில் பார்க்கலாம்.

தனுஷ்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கலந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் இளைய தளபதி விஜய் சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் விஜய் தன்னுடைய மனைவியை விட இரண்டு வயது இளையவர்.

யாஷ்:

Advertisement

கன்னடத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யாஷ் தன்னுடன் நடித்த ராதிகாவை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மனைவியை விட அவர் இரண்டு வயது இளையவர்.

மகேஷ் பாபு:

Advertisement

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு நம்ரதா ஷிரோத்கர் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் மகேஷ் பாபு தனது மனைவியை விட 4 வயது இளையவர்.

விஷ்ணு விஷால்:

Advertisement

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஷ்ணு விஷால் ராஜினி நட்ராஜ் என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விஷ்ணு விஷால் தன்னுடைய மனைவியை விட ஒரு வயது இளையவர்.

அபிஷேக் பச்சன்:

Advertisement

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழும் அபிதாப் பச்சன் அவர்களின் மகன் அபிஷேக் பச்சன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மனைவியை விட அவர் இரண்டு வயது இளையவர்.

ஷில்பா ஷெட்டி:

Advertisement

முன்னணி பாலிவுட் நடிகையான இவர் ராஜ் குந்தரா என்ற தொழிலதிபரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது கணவரை விட மூன்று மாதங்கள் இவர் பெரியவர்.

பிரசன்னா:

Advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான பிரசன்னா பிரபல நடிகையான சினேகாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் பிரசன்னா தனது மனைவியை விட ஒரு வயது இளையவர்.

விக்ரம்:

Advertisement

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் விக்ரம் தன்னுடைய மனைவியை விட ஆறு வயது இளையவர்.

சைஃப் அலிகான்:

Advertisement

பாலிவுட்டில் பிரபல நடிகரான சைஸ் அலிகான் முதலாவதாக அமிர்தாசிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய மனைவி அம்ரிதா சிங்கை விட 13 வயது இளையவர். அதன் பிறகு அவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in