LATEST NEWS
அனிருத் – ஆண்ட்ரியா பிரேக்கப் செய்ய காரணம் என்ன தெரியுமா?.. பல வருடம் குறித்து அவிழ்ந்த உண்மை..!!

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஆன்ட்ரியா நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது சிறந்த பாடகியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காட வைத்தார். நடிகர் தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அனிருத்.
இதனிடையே அனிருத் ஆண்ட்ரியா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருவரது பெயரையும் டேமேஜ் ஆகியது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிறகு பிரிந்து விட்டனர். இது உண்மை என்பது போல ஆண்ட்ரியா பல வருடம் ஸ்கிரீனில் தென்படாமல் இருந்தார். இவர்கள் இருவரின் பிரிவுக்கு வயது வித்தியாசம் தான் காரணம் என சினிமா பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதாவது அனிருத் சினிமாவுக்குள் நுழைந்தபோது அவருக்கு 19 வயது. ஆனால் ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. தன்னைவிட ஆறு வயது மூத்த பெண்ணை காதலித்தது தான் இவர்களின் காதல் முறிவுக்கு காரணம் எனவும் நடிகை ஆண்ட்ரியா குறித்து அந்த நேரத்தில் வெளியே வந்து சர்ச்சையால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.