ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த காயத்ரி ஜெயராமன்… இப்போது எங்கே இருக்கிறார்…சினிமாவுக்கு குட்பை… ஆழ்கடலில் புது லைஃப்… ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய காயத்ரி ஜெயராமன்…! – cinefeeds
Connect with us

CINEMA

ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த காயத்ரி ஜெயராமன்… இப்போது எங்கே இருக்கிறார்…சினிமாவுக்கு குட்பை… ஆழ்கடலில் புது லைஃப்… ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய காயத்ரி ஜெயராமன்…!

Published

on

2001-ஆம் ஆண்டு ஷாரூக்கான், அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அசோகா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு நடனத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். அதே ஆண்டிலேயே, பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார். தொடர்ந்து சூர்யாவுடன் ‘ஸ்ரீ’, ஸ்ரீகாந்துடன் ‘ஏப்ரல் மாதத்தில்’ மற்றும் தளபதி விஜய்யுடன் ‘வசீகரா’ எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். ஒரு காலத்தில் காயத்ரி ரகுராம் மற்றும் காயத்ரி ஜெயராமன் ஆகிய இருவரில் யார் இவர் என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருக்கும் அளவிற்குப் பிரபலமானவராகத் திகழ்ந்தார்.

விஜய்யுடன் நடித்த ‘வசீகரா’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்காத காயத்ரி, 2006 வரை மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர், 2007-ல் சமீத் சாவ்னி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார். இடையில் சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அவர், கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான ‘உப்பென்னா’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தலை காட்டியிருந்தார். அதன் பிறகு திரை வெளிச்சத்திலிருந்து முற்றிலும் விலகி, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Advertisement

தற்போது 41 வயதாகும் காயத்ரி ஜெயராமன், சினிமாவில் இருந்து விலகி அந்தமானில் பயிற்சி பெற்ற ஸ்கூபா டிரைனராக (Scuba Trainer) தனது அடுத்தகட்ட வாழ்க்கையை ஆழ்கடல் சாகசங்களுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் ஆழ்கடலில் சிதைந்து போன கப்பல் ஒன்றை ‘ ‘ செய்து பார்க்கும் திகைப்பூட்டும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை சதா வைல்ட்லைஃப் போட்டோகிராஃபராக மாறியதைப் போல, காயத்ரி ஜெயராமன் தற்போது ஸ்கூபா ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியுள்ள இந்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in